பொதுவாக நமது உடம்பில் இருக்கும் கொழுப்புகள் பெரும்பாலும் வயிறு, கை, தொடை போன்ற பகுதிகளில் அதிகம் சேர்வது இயல்பானது.
ஆனால், சிலருக்கு உடல் எடை அதிகமாக இல்லை என்றாலும் முகத்தின் தாடைக்கு கீழ் பகுதியில் மட்டும் சதைப்பை போன்று அசிங்கமாக தொங்கும் கொழுப்புகள் அதிகமாக இருக்கும்.
இந்த பிரச்சனை மூலம் நமக்கு கழுத்து இருப்பதே தெரியாது. எனவே இது நமது அழகினை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இது போன்ற சதைப்பையை போக்குவது மிகவும் கடினமான விஷயம் அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலமாக கழுத்து மற்றும் தாடையின் கீழ் பகுதியில் இருக்கும் கொழுப்பை எளிமையாக நீக்கி விடலாம்.
தாடையில் உள்ள கொழுப்பை கரைப்பது எப்படி?
முதலில் நம்முடைய கழுத்துப் பகுதியை நேராக வைத்துக் கொண்டு, கீழும் மேலும் கழுத்தை அசைக்க வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 10 நிமிடம் வரை செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் செய்து வர வேண்டும்.
இந்த பயிற்சி முறையை தினமும் 10 நிமிடம் தவறாமல் செய்து வந்தால், நமது கழுத்து மற்றும் தாடையின் கீழ் இருக்கும் அதிகப்படியான கொழுபுகள் கரைந்து, ஸ்லிம்மான அழகான தோற்றத்தினை பெறலாம்.