இந்த ஐபிஎல் சீசனோடு ஐதராபாத் அணியிலிருந்து வெளியே போவதை ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் பிளேயிங் லெவனில் வார்னர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது.
எனினும், வார்னருக்கு பதில் களமிறக்கப்பட்ட ஜேசன் ராய் பட்டயை கிளப்பினார். ஐதராபாத் அணியும் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஐதராபாத் அணி பதிவிட்ட போஸ்ட்டுக்கு கீழ், வார்னர் மைதானத்தில் இருக்கிறாரா.. அவரை காணவில்லையே என ரசிகர் ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அதற்கு பதிலளித்த வார்னர், துரதிருஷ்டவசமாக, இனி நான் மீண்டும் வரமாட்டேன் ஆனால் தயவுசெய்து தொடர்ந்து ஆதரவளியுங்கள் என உருக்கமாக கூறினார்.
அதேசமயம், ஐதராபாத்-ராஜஸ்தான் மோதிய போட்டிய ஹோட்டல் அறையிலிருந்த படி பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை வார்னர் வெளியிட்டார்.
ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் டேவிட் வார்னருக்கு இந்த ஐபிஎல் சீசன் மிக மோசமானதாக அமைந்தது.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/09/lkt.jpg)
2021 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில், இனி வார்னர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
மேலும், அவர் இந்த சீசனுக்கு பிறகு ஐதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என ஐபிஎல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.