ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இளம் வீரர் ஒருவரை எடுக்க அணிகளுடையே போட்டி நிலவும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் புள்ளிப்பட்டியலில் சென்னை மற்றும் டெல்லியைத் தவிர அடுத்த மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சொதப்பிய கொல்கத்தா அணி, இரண்டாம் பாதியில் மிரட்டி வருகிறது. தற்போது அந்தணி புள்ளிப் பட்டியலில் 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்விகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அந்தணியின் துவக்க வீரராக இப்போது வந்துள்ள வெங்கடேஷ் அய்யர் தான், இவர் கொலகத்தா அணி ஒர் ஆல் ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவரை யாரும் இந்த அளவிற்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை, கோலியின் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் 41 ஓட்டம், மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் அரைசதம் பேட்டிங்கில் மட்டுமின்றி, டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும், பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில், 1 விக்கெட்டும் எடுத்து அசத்தி வருகிறார்.
இதனால் இவரை அடுத்த முறை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும், அப்படி இவர் ஏலத்தில் வந்தால் 12 முதல் 14 கோடி ரூபாய் ஏலத்திற்கு போவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து ESPN Cricinfo-வுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அடுத்து வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில், 26 வயது மதிக்கத்தக்க வெங்கடேஷ் அய்யர் அதிக தொகைக்கு போவார். என்னுடைய கணிப்பு படி பார்த்தால், 12 முதல் 14 கோடி வரை போகும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய பேட்டிங் சராசரி 47 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 92-ஆக உள்ளது. அதுமட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் நல்ல தொரு பேட்டிங் சராசரி வைத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி, கடைசி கட்டத்தில் அவரால் சிறப்பாக ஓவரும் போட முடிகிறது. இதுவே அவர் அதிக விலைக்கு போக முக்கிய காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.