வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்கும் இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, மிரிஹானயில் உள்ள தனது இல்லத்தில் இன்று (04) அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் போன்றே, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அரச தலைவர் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மரபுகளுடன் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம், இலங்கையுடன் இணைந்துப் பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்கள் குறித்து பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில், விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வொன்றின் தேவை தொடர்பில் வலியுறுத்தினர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கையொன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தனர் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தேவையான குழுக்களை நியமித்து, அவற்றின் அறிக்கைகளுக்கமைய, நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அரச தலைவர் இதன்போது தெரிவித்தார்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/10/WW-1024x682.jpg)
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/10/PJ-1024x682.jpg)