தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொருத்தமான தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசின் முயற்சிகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் மேலாண்மை திறனை வெளிப்படுத்தவில்லையென்பதை சுட்டிக்காட்டினார்.
உலக வல்லரசுகளுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கு இடையில் நாடு தள்ளப்படுவதற்கு வழிவகுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தாங்கள் எதிராக இருப்பதாக பியதாச கூறினார்.
இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை நாடு சாதகமாக நிர்வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போதைய நிர்வாகம் கோவிட் -19 தொற்றுநோய், அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சீனி மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் நிர்வகிக்க தவறிவிட்டது என்றார்.