அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என வெளியிட்டு வரும் கருத்துக்களை நிறுத்திக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரி்க்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சில அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்களிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பற்றி கருத்து வெளியிடுவதை அந்த கட்சியின் அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.