டெல்லி அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி மட்டும் ஜெயித்தால், சென்னை அணிக்கு கடும் சிக்கல் என்பது நேற்றைய தோல்வி மூலம் உருவாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அந்த நான்காவது அணி எது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இன்று நடைபெறும் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எந்த அணி தோல்வியடைகிறதோ, அதன் பின் கிட்டத்தட்ட உறுதி செய்துவிடலாம்.
இந்நிலையில், நேற்று சென்னை அணி, டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், மூன்றாவது இடத்திற்கு செல்லும் நிலை உள்ளது. ஏனெனில் இதுவரை விளையாடியுள்ள சென்னை அணி 13 போட்டிகளில் 9 வெற்றி 4 தோல்வியுடன் 18 புள்ளிகளில் 2-வது இடத்தில் உள்ளது.
அதே போன்று பெங்களூரு அணி 12 போட்டிகளில் 8 வெற்றியுடன் 16 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு இன்னும் ஒரே போட்டி மட்டும் தான் உள்ளது. அந்த போட்டியில் ஜெயித்தால் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளுடன் நீடிக்கும்.
பெங்களூரு அணிக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலுமே பெங்களூரு அணி ஒருவேளை அதிக ரன் ரேட்டில் ஜெயித்துவிட்டால், 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடும்.
அப்படி இரண்டாவது இடத்திற்கு சென்றால், பிளே ஆப் சுற்றில் அவர்களுக்கு இரண்டு வாய்ப்பு கிடைக்கும் வாய்பை சென்னை அணி இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.