பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் கஷ்டப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள்.
பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் கூட உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்படுவதை நாம் காணமுடிகிறது. இதற்கு வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் தான் காரணமாக இருக்கிறது.
இதனை தவிர்க்க வேண்டுமாயின் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து, கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
அந்தவகையில் தற்போது உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
ப்ரோக்கோலி இது எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. எனவே உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களை பெற ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே உங்கள் டயட் லிஸ்டில் கேரட் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது உடல் எடையை குறைக்க மட்டுமின்றி கண் பார்வையை மேம்படுத்தவும் சிறந்து விளங்குகிறது.
காலே முட்டைகோசு குடும்பத்தை சேர்ந்தது. இதன் இலைகள் பச்சை நிறத்திலும், ஊதா கலந்த மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம். இது உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
அருகுலா வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியையும், இரத்த உறைதலையும் அதிகரிக்க உதவுகிறது. இதனை தொடந்து சாப்பிட்டு வர உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு முக்கியமான உணவு ஆப்பிள் தான். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள்.
பெர்ரி பழத்தில் இயற்கையாகவே கலோரிகள், நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. எனவே ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். மேலும் கிராம் கருப்பட்டி, அவுரிநெல்லி போன்றவையும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.