ஆப்கானிஸ்தானில் பள்ளி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இதற்கிடையே, கடந்த 20 வருட பட்டப்படிப்புகள் பயன்படாது என ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை மந்திரி சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. கையெறி குண்டு ஒன்று அந்தப் பள்ளியில் வெடிக்க செய்யப்பட்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.