Loading...
யாழ்.மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
எனினும் விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
மிருசுவில் பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...