யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 50 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 28 வயதான இளம் பெண் ஒருவர் நெல்லியடிப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். எனினும், அவர் மிக சூட்சுமமாக செயற்பட்டு வந்ததால், இதுவரை கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவரது வீட்டில் போதைப்பொருள் வழங்க ஒருவர் வந்து சென்றிருக்கலாமென கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று நண்பகல் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்று பொலிசாரின் உதவியுடன் சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது அவ் வீட்டில் 50 கிராம் போதைப்பொருள் மற்றும் 165, 500 ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. . இதேவேளை அண்மையில் யாழ் நகரில் முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட சமயம், பொலிசார் கைது செய்ய முயன்றபோது, அவரது கணவர் தப்பியோடி தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.