வீரர் என்பதைத் தாண்டி டோனி சிஎஸ்கேவின் சொத்து என இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறியுள்ளார்.
டோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என்றும் ரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.
2020 ஆகஸ்ட் மாதத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டோனி. இந்தச் சூழலில்தான் அவர் இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற பரவலான செய்தி உலா வந்தது.
இந்த நிலையில், நான் நிச்சயமாக எனது ஓய்வை சென்னையில்தான் அறிவிப்பேன். ஆனால், நான் மஞ்சள் ஜெர்சியில் இருப்பேனா என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்று டோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறும்போது, டோனி சிஎஸ்கேவின் வீரர் மட்டுமல்ல. அடுத்தாண்டு ஏலத்தில் டோனியை அணி நிர்வாகம் தக்க வைக்க வேண்டும். டோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது. வீரர் என்பதைத் தாண்டி டோனி சிஎஸ்கேவின் சொத்து என கூறியுள்ளார்.