கொரோனா தொற்று காரணமாக 67 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் கபில ஜயரத்ன இதனை தெரிவித்தார்.
அவர்களில் 13 பேர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.
கோவிட் -19 இன் அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் குழந்தைகளில் 95 சதவிகித உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
கோவிட் நிமோனியாவே பெரும்பாலானோரின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
சுகாதார அமைப்பு மீதான எதிர்மறை உணர்வுகள் காரணமாக, குழந்தைகளிற்கு தொற்று உறுதியான பின்னரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. சிலர் வைத்தியசாலை பராமரிப்புக்கு பயப்படுவதாகவும் தொழில்முறை ஆரோக்கியத்தை நாடுவதைத் தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் வைத்தியசாலைகளில் சிறந்த கவனிப்பைப் பெற்று முழுமையாக குணமடைந்ததாகக் குறிப்பிட்டார்.
நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பு வழங்க சிறப்பு வைத்தியர்கள் தங்களை அர்ப்பணிப்பதாகவும், எனவே நாட்டின் சுகாதார அமைப்பில் பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.