பெலாரஸ்-லிதுவேனியா எல்லைக்கு அருகில் ஒரு இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி லிதுவேனியா எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள புதர்களிற்குள்ளிருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 29 வயதுடைய அந்த இளைஞனின் சடலத்துடன், மொபைல் போன், வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதன்மூலம் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
ராகவன் கிருஷாந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவிற்குள் சட்டவிரோத நுழைய முயன்ற இளைஞன் என கருதப்படுகிறது.
லிதுவேனியாவிற்குள்ளிருந்து பெலாரஸுக்கு கட்டாயமாக வெளியேற்றப்பட முயன்ற புலம்பெயர்ந்தோர் குழுவில் அவர் ஒருவர் என்று நம்புவதாக லிதுவேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எல்லை கடந்த அகதிகளை வெளியேற்ற எல்லைக் காவலர்கள் மிகப்கொடூரமான தாக்குதல்களை நடத்துவதாக லிதுவேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளை வெளியேற்ற, எல்லைக் காவலர்கள் நடத்தும் கொடூர தாக்குதல்களில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் உயிரிழப்பது இது முதல்முறையல்ல.
ஓகஸ்ட் மாதத்தில் ஒரு குடியேற்றக்காரர் பெலாரஷ்ய எல்லைக் காவலர்களின் கைகளில் இறந்தார்ம். செப்டம்பர் 19 அன்று பெலாரஷ்யன்-போலந்து எல்லை அருகே இறந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பெலாரஸுடனான போலந்து எல்லை மண்டலத்தில் மேலும் மூன்று அகதிகள் இறந்து கிடந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் அதன் கிழக்கு எல்லைகளில் நடக்கும் இந்த மனிதாபிமான பேரழிவைவு தொடர்பாக கண்மூடித்தனமாக இருக்கிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் வலுக்கட்டாயமாகத் திரும்புவது அகதிகள் நிலை தொடர்பான மாநாடு அல்லது அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய சாசனம் அல்லது பிற ஆவணங்களுக்கு மாறானது.
இலங்கை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.