Loading...
பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (8) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
Loading...
அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...