Loading...
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த 21ஆம் திகித முதல் 30ஆம் திகதிவரையான காலகட்டத்தில் திடீரென மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 நாட்களில் 500 கோடி ரூபா வரை மதுபன விற்பனை வருமானம் பெறப்பட்டதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனைத் குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜீ. குணசிறி தெரிவிக்கின்றார். அதேபோல கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலக்டத்தில் சட்டவிரோத மது உற்பத்திகளை செய்த சுமார் 20261 இடங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
இந்த சம்பவம் தொடர்பில் முப்பதாயிரம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.மேலும் இதன்போது பல்வேறு போதைப்பொருளுடன் தொடர்புடைய 2765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...