நினைத்த காரியம் நிறைவேறும் நாள். விரதம்இவழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
காலை நேரத்தில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசுவழியில் ஆதாயம் கிடைக்கும்.
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.
அன்பு நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகை மாறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வங்கிச் சேமிப்புகள் உயரும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். நம்பி வந்தவர்களுக்கு உதவிசெய்து மகிழ்வீர்கள். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வருமானம் இருமடங்காகும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் ஏற்படும். மனக்குழப்பம் அகலும்.
நெருக்கடிகள் அகல நிதியுதவி கிடைக்கும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். குடும்பச் செலவுகள் கூடும்.
விரோதிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். அனுபவமிக்கவர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்.
விலைஉயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி அமையும்.