வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் மேலும் பல அமைச்சர்கள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் கடைசி நேரத்தில் அமைச்சர்கள் தமது முடிவை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் நேற்று இடம்பெற்ற சனி மாற்றமாகும்.
தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு அமைச்சர்கள் கலந்துக் கொள்வதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஹெலிகொப்டர் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த ஹெலிகொப்டர் யாரும் இல்லாம் வெறுமையாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த ஹெலிகொப்டரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சென்றுள்ளார்.
யாழில் ஆரம்பிக்கப்பட்ட தூதுரக அலுவலகத்தின் நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் தலதா அத்துகோரள உட்பட பலர் கலந்துக் கொள்ள ஆயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனி மாற்றம் காரணமாக ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த விஜயத்த தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.