மத்திய வங்கி முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.டி.சித்தரசிறி, பி.ஜயவர்தன மற்றும் முன்னாள்பிரதி கணக்காய்வாளர் நாயகம் கே.வேலுப்பிள்ளை ஆகியோர் ஆணைக்குழுவில்உள்ளடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்ததகவலை வெளியிட்டுள்ளார்.மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பும்இந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணைமுறி மோசடி குறித்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக விரைவில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைய, இன்றைய தினம் அவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்கான ஆணையாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.