டி.சி.எல். நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.சி.எல். தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கிளாஸ்களில் மைக்ரோ எல்.இ.டி. டிஸ்ப்ளே, டி.சி.எல். உருவாக்கிய வேவ்-கைடு வழங்கப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் சாதாரன கண்ணாடிகளை போன்றே காட்சியளிக்கிறது. இதில் இன்பில்ட் கேமரா உள்ளது. இந்த கண்ணாடி ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்கிரீன்களை ஒளிபரப்பும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் அழைப்புகளை மேற்கொள்வது, ஆக்மென்டெட் ரியாலிட்டியில் நேவிகேஷன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.
தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் கிளாஸ் முதற்கட்டமாக சீனாவிலும் அதன் பின் சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு வருகிறது.