Loading...
‘சைத்தான்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எமன்’. இப்படத்தை ‘நான்’ பட புகழ் ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்துள்ளார். மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான தியாகராஜனும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் பாடல்களை வெளியிடவுள்ளனர்.
Loading...
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Loading...