அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக நாடாளுமன்ற உறு சந்திக்காமல், பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்தது தொடர்பாகவும், பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடனான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது
நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள், அப்போது, அரசு கொண்டுவரும் மசோதா மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சசிகலா ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்களவை துணை சபாயநாகர் தம்பிதுரை, டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று(வியாழக்கிழமை) இரவு சென்னை வந்தார்.
மக்களவையின் 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 13 உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாகவும், இதில் தமிழக அரசு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.