விஜய் நடிக்கவுள்ள அடுத்தபடமான ‘விஜய் 61’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு பின்னர் விஜய்-ரஹ்மான் இணைவது இது மூன்றாவது முறையாகும். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ‘தெறி’ இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார்.ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.