தடுப்பூசி ஏற்றச்செல்லும் மாணவர்களுக்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்கிறார் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிசெய்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நீண்ட காலமாக வீடுகளிலேயே இருந்தமையால், மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதனால், தடுப்பூசி ஏற்றத்திற்காக சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தங்களின் சீருடையை அணிந்துசெல்ல முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே தடுப்பூசி ஏற்றத்திற்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்பதுடன், சீருடை உள்ளவர்கள் அதனை அணிந்து செல்ல முடியும்.
அவ்வாறின்றேல், தடுப்பூசி ஏற்றத்திற்கு பொருத்தமான ஆடையை மாணவர்கள் அணிந்து செல்ல முடியும்.
அத்தோடு அடையாள அட்டை உள்ள மாணவர்கள் அதனை கொண்டுச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.