நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு “இஸ்லாமிக் ஸ்டேட் இன் மேற்கு ஆபிரிக்க மாகாணம்” என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தி வருவதால், நைஜீரிய படையினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதன் பலனாக, ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவரான “மளம் போகோ” வை நைஜீரிய பாதுகாப்பு படையினர் கடந்த வார தொடக்கத்தில் சுட்டுக்கொன்றுள்ளதாக, நைஜீரிய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் பபாஹூனா மங்குனா உறுதிசெய்துள்ளார்.