மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ்காரர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மோட்டார் சைக்கிள் சாரதியை நிறுத்தும்படி பொலிசார் உத்தரவிட்டும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதையடுத்து, ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அந்த பொலிஸ்காரரை இடைநீக்கம் செய்ய பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உத்தரவிட்டார்.
இது குறித்து அமைச்சர் அளித்த விளக்கத்தில், விபத்து நடந்த இடத்தை பொலிஸ் உத்தியோகத்தர் அளந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பொலிசாரின் அளவுநாடாவை இழுத்து சென்றது. பொலிசார் நிறுத்தக் கோரியும் நிறுத்தாமல் சென்றதால், 500 மீற்றர்கள் பொலிசார் விரட்டிச் சென்று அவர்களை பிடித்ததாக தெரிவித்துள்ளார்.