Loading...
பெண்கள் பண்டிகை காலம் வரும் போது மற்றவர்களை விட தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. இதனால் பண்டிகை வர ஒரு வாரத்திற்கு முன்பே முகம் வெண்மையாக பலவற்றை ட்ரை செய்வது உண்டு.
ஆனால் அதுக்கான பலன் உடனடியாக கிடைக்கவில்லை. கவலை வேண்டாம்! முகம் ஒரே வாரத்தில் பொலிவு பெற இப்படி செய்யுங்கள்.. முல்தானி மெட்டியுடன், தேன், தேங்காய் பால், கேரட், முட்டைவெள்ளை கரு,பப்பாளி, சந்தனப்பவுடர் ஆகியவற்றைச்சேர்த்து வீட்டிலேயே நாம் பேசியல் மேற்கொள்ளலாம்.
Loading...
பாதாம் மற்றும் பாலுடன் முல்தானி மெட்டி:-
- முல்தானி மெட்டியுடன் அரைத்த பாதாம் மற்றும் சிறிதளவு பால் சேர்ந்து பேஸ்பேக் போன்று தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு நிமிடத்திற்குப் பிறகு முகத்தில் முழுவதும் தடவி பின்பு ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவிக்கொள்ளவேண்டு்ம்.
- இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் போது பாதம் மற்றும் பாலில் உள்ள சத்துக்களால் சருமத்தை மென்மையாகவும் மாற உதவுகிறது. எனவே முகம் எப்பொழுதும் வறட்சியாக உள்ளது என்று இனி கவலைப்பட வேண்டாம்.
தக்காளி ஜூசுடன் முல்தானி மெட்டி:-
- தக்காளி ஜூசுடன் முல்தானி மெட்டியைப்பயன்படுத்தும்போது முகப் புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. எனவே முல்தானி மெட்டி, தக்காளி ஜுஸ் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ் பேக் உபயோகிக்கலாம்.இதே போன்று முல்தானி மெட்டியுடன் தேன், தேங்காய் பால், கேரட், முட்டை வெள்ளை கரு,பப்பாளி, சந்தனப்பவுடர் ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே நாம் பேசியல் மேற்கொள்ளலாம். இதன் மூலம் முகப்பொலிவை நாம் எளிதாகப் பெற முடியும்.
Loading...