சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள படம் ‘குங்புயோகா’. இதில் ஜாக்கிஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘அனேகன்’ பட நாயகி அமைராதஸ்தூர் ஜாக்கிஜானுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்தி வில்லன் நடிகர் சோனுசூட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வருகிறது. ‘குங்பு யோகா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜாக்கிஜான் பங்கேற்றுவருகிறார். அவருடன் சோனுசூட்டும் சேர்ந்தே செல்கிறார்.
சமீபத்தில் சோனுசூட்டும், ஜாக்கிஜானும் ஒரே சைக்கிளில் சென்றார்கள். சோனுசூட் சைக்கிளை ஓட்ட, ஜாக்கிஜான் பின்னால் உட்கார்ந்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களிடம் வேகமாக பரவியது.
இந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளர் கபால் ஷர்மா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஜாக்கிஜான் கலந்து கொண்டார். அப்போது அவர் சவாரி செய்த சைக்கிள் ஏலம் விடப்பட்டது.
இதை ஜாக்கிஜானின் ரசிகர் ஒருவர் ரூ. 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.