பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான ஷாநவாஸ் தஹானி, டோனியை சந்தித்தது மறக்கவே முடியாது என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் தலைவரான கோலி, சிறப்பாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் துவக்க வீரர்களை தலையில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
அதே போன்று இந்திய அணியின் ஆலோசகரான டோனி, பாகிஸ்தான் வீரர்கள் பலரிடம் பேசுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வெளியாகின.
இதில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான Shahnawaz Dahani ஒரு படி மேலே சென்று, டோனியுன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை எடுக்கும் படி அங்கிருந்த வீரர் ஒருவரிடம் சொல்லி புகைப்படத்தை எடுத்தார்.
இந்நிலையில், Shahnawaz Dahani தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ஒரு அற்புதமான இரவு, பாகிஸ்தானின் வெற்றி ஒரு மகிழ்ச்சி மற்றும் என கனவு வீரர் டோனியை சந்தித்தது மறக்க முடியாத ஒன்று பதிவிட்டுள்ளார்.