நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் பல நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொஸ்கம காவல்துறை பிரிவில் சுதுவெல்ல பிரதேசத்தில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் ஐஸ் போதைப்பொருடன் 20 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னேரியா காவல்துறை பிரிவில் படுஓய பாலத்திற்கருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தில் 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் 26 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் முல்லேரியா காவல்துறை பிரிவில் ஹம்புட்டான பிரதேசத்தில் தலங்கம பிரதேசத்தில் 30 கிராம் ஏஷ் என்ற போதைப்பொருள் மற்றும் 5 கிராம் குஷ் போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.