Loading...
நாட்டில் அதியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 02 மாதங்களில் மூன்றாவது தடவையாக மீண்டும் அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு புறக்கோட்டை அரிசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அதன்படி நாடு அரிசி 15 ரூபாவினாலும், சம்பா அரிசி 10 ரூபாவினாலும், கீரி சம்பா 30 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ம்கூறப்படுகின்றது.
Loading...
எனினும் 110 ரூபாவுக்கு விற்பனையாகும் கெக்குலு அரிசியின் விலையில் மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில் புதிய விலைப் பட்டியலாக நாடு – 130 ரூபா, சம்பா – 150 ரூபா, கீரி சம்பா – 195 ரூபா இனி காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...