இறுதிச்சமரில் ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் புலனாய்வுபிரிவின் அணியினரால் பலவந்தமாக பின் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவல்கள் காலம் கடந்து வெளிவருகின்றதன் காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர் மகிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இலங்கைப் புலனாய்வாளர்கள் தமது வேலைத்திட்டங்களை பலவழிகளில் செயற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பான ஆய்வுகளும் மற்றும் கலந்துபேசுதல் போன்ற விடயங்களை ஏன் வர்த்தக நிலையங்களில் பழப்புளி கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு கூட அச்சமடையும் நிலையே அப்பொழுது காணப்பட்டது.
ஆனால் தற்பொழுது நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ்க்கட்சிகள் குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிகபலத்துடன் இருப்பதினாலும் எல்லாவற்றையும் கடந்து சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கையில் அவர்கள் பரஸ்பரம் தமக்குள் விடுதலைப் புலிகள் தொடர்பான விடயங்களை எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
எனினும் இலங்கை புலனாய்வாளர்கள் தம்மை அவதானிக்கின்றதாகவும், ஒருவேளை ஆட்சிமாறுதல் ஏற்பட்டால் அது கூடாத ஆட்சியாக இருந்துவிட்டால் தமக்கு ஏதும் அசேளகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் எண்ணத்தவரவில்லை.
எதுவாயினும் வடக்கில் மக்கள் கூடுதலாக எல்லோரும் புலனாய்வுய்வு தன்மையுடனே காணப்படுகின்றார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஆய்வாளர்களின் கருத்தின்படி அது உண்மையாகத்தான் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன செல்வதாகவும் அதற்கான ஏற்பாடுகள் பல நடந்து கொண்டிருந்தது.
ஆனால் அன்று ஜனாதிபதி அவ்விடத்திற்கு வரமாட்டார் என்பதை பொதுமக்கள் சிலர் ஏற்கனவே அறிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது எப்படி என்றால் ஜனாதிபதியின் வருகைக்காக சகல ஒழுங்குகளும் மேற்கொண்ட போதும் காலை 7.00 மணியளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட மேடையில் ஆசனக்கதிரைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே ஜனாதிபதிக்குரிய கதிரைவைக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் வடக்கில் பொதுமக்கள் நாட்டின் தற்போதைய அரசியல் ஓட்டத்தை மிக உண்ணிப்பாக அவதானிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.