கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பள்ளி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் மாணவியை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல நினைத்த அந்த மாணவன், அந்த மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கொள்ளலாம், அப்படி., இப்படி., என்று சொல்லி மயக்கி, காதல் என்ற வலையில் அத்துமீறி நடந்துள்ளான்.
மேலும், சிறுமியின் பெற்றோர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து மாணவியிடம் அத்துமீறி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், சிறுமியிடம் உனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அந்த சிறுமி, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய 12ஆம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.