பிக்பாஸ் சீசன் 5 கடந்த சீசன்களை விட இந்த சீசன் மிகவும் மந்தமாகவே சென்றுகொண்டிருக்கிறது. பலரும், போட்டியில் சுவாரசியம் இல்லை எனவும், ஐபிஎல் மற்றும் டி20 உலககோப்பை காணவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனாலும், இந்நிகழ்ச்சியில் ஓரளவுக்கு சூடுபிடித்த நிலையில், கடந்த வாரம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தேவையில்லாமல் மற்றவர்களை இணைப்பில் செய்தார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அபிஷேக் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு அது சுவாரஸ்யமானதாக இருக்கவேண்டும்.
நான் விதிகளுக்கு உட்பட்டு விளையாடினேன். என்னுடைய சக போட்டியாளர்கள் மனதில் போட்டியின் தன்மையை நான் தூண்டினேன். அது டாஸ்கில் மட்டும் தான். ஏனென்றால் எனக்கு ஒவ்வொரு போட்டியாளர் உடனும், நல்ல பந்தம் இருக்கிறது.
மேலும், நான் பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் இருக்க போகிறேன். என்பதையே பணயமாக வைத்து இப்படி செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு நான் உண்மையாகவே இருந்திருக்கிறேன் என்ற திருப்தி உடன் வெளியே வந்திருக்கேன்.
உண்மையாக இருப்பது தான் எல்லாவற்றையும் விட எனக்க்கு முக்கியம். நான் என்னுடைய ஷோவையும், என் வாழ்க்கையும் கூட அப்படி தான் நடத்துவேன் என அபிஷேக் தெரிவித்துள்ளார்.