Loading...
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் இன்று தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்காக அவரது தந்தை , நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார்.
Loading...
அதில் “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மணி, இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளாய். ஆனால், மறக்காதே இது வெறும் ஆரம்பம் தான். நேசிக்கிறேன் உன்னை” என கமலஹாசன் தனது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஸ்ருதிஹாசன், அதன் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Loading...