சீனாவில் இந்த ஆண்டு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு நிபுணர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இவை மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் சீன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் H5N6 துணை வகையுடன் 21 மனித நோய்த்தொற்றுகளை பதிவுசெய்துள்ளதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
2017 இல் H7N9 நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை விட இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்துள்ளது.
தற்போது நோய்த்தொற்றுகள் தீவிரமாகி பலரை மோசமாக நோய்வாய்ப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பெரும்பாலான தொற்றுகள் கோழிப்பண்ணையுடன் தொடர்பு கொண்டவை ஆகும். மேலும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.