கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்வரும் நாட்களில் அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 200 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு. நிலைமையை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சமூக இடைவெளி, கை சுத்திகரிப்பு மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து மூடுவது ஒரு தீர்வாகாது. சில நடவடிக்கைகள் தடுப்பூசி உந்துதலுடன் மீண்டும் தொடங்கலாம். இருப்பினும் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்தால் சிக்கல்கள் ஏற்படும் என்றார்.