தமிழகத்தில் சொத்துக்காக, தாய், தந்தை தம்பி ஆகியோரை கொலை செய்த கணவன் மற்றும் மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு கணவன் ராஜ், மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் ஏ.சி வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சொத்துக்காக இவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு, ஏ.சி.வெடித்துவிட்டதாக இவர்களின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவரின் மனைவி தீப காயத்ரி நாடகமாடியது தெரியவந்தது.
சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி என அனைவரையும் ஈவு ஈரக்கமின்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதில் கணவன் மனைவி இருவருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.