கொழும்பில் மூன்று மாடி சொகுசு வீடொன்றிற்குள் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லேரியா, ஹிம்புதான வீதியில் உள்ள வீட்டின் மூன்றாவது மாடியில் 10க்கு 10 அடி கொண்ட அறையொன்றில் இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 35 வயதுடைய நபரொருவர் ஹிம்புதான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டைச் சோதனையிட்ட போது அங்கு கஞ்சா செடிகள் வளக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா செடிகளை வளர்த்த நபரும் கைது செய்யப்பட்டு முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.