Loading...
ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள சாணக்கியன் , இந்த குழு முரண்பாட்டிற்கான வரைவிலக்கணம் என தெரிவித்துள்ளார்.
Loading...
அதோடு சட்டத்தை முறையான விதத்தில் ஒழுங்குபடுத்த முடியாத நிலையில் குழுவொன்றை அமைப்பதன் நோக்கம் என்னவெனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த குழுவிற்கு குற்றவாளியொருவரை நியமித்துள்ளமை வேடிக்கையான விடயம் எனவும் சாணக்கியன் கூறியுள்ளார்.
Loading...