Loading...
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினாலும், அங்கு அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
Loading...
துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த கோர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...