பிக்பாஸ் டாஸ்கில் சரியாக செயல்படாத ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா மற்றும் பாவனி ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியின் ஒன்றான விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சி மூன்று வாரங்கள் முடித்து நான்காவது ஆரம்பித்துள்ளது. இந்த வாரத்தில் ஊரு விட்டு ஊரு வந்து என்கிற ஒரு புது டாஸ்க் பிக்பாஸால் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணி நகரவாசிகளாகவும், இன்னொரு அணி கிராமவாசிகளாகவும் உடை அணிந்து இருக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும் நகரத்து அணிக்கு கேப்டனாக நிரூப் மற்றும் கிராமத்து அணிக்கு கேப்டனாக அக்ஷரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த டாஸ்கின் நடுவராக இசைவானி செயல்படுவார் என்றும் சொல்லப்பட்டது.
ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படாத இருவரை இரண்டு அணிகளும் தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்தது. நகரத்து அணியிலிருந்து பவானி ரெட்டியை தேர்வு செய்தனர்.
கிராமத்திலிருந்து மதுமிதாவை தெரிவுசெய்தனர். அவர்கள் இருவரும் இரவு முழுவதும் தூங்காமல் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தீ மூட்டி அதை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் தண்டனை கொடுத்துள்ளார்.