Loading...
பதுளை, வெவெல்ஹின்ன தோட்டத்தில் பொருளாதாரப்பிரச்சினை காரணமாக தாய் ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விசம் கொடுத்து, தானும் அருந்தியுள்ளார்.
எனினும், பிரதேசவாசிகளின் துரித நடவடிக்கையால் அவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டனர்.
31 வயதான தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மகள்களே விசம் அருந்தியுள்ளனர்.
Loading...
அவர்களை மீட்ட பிரதேசவாசிகள், பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர்கள் நால்வரும் காப்பாற்றப்பட்டனர்.
தாயாரினால் தேனீரில் விசம் கலக்கப்பட்டு பிள்ளைகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...