ஒரு நாடு – ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabayan Rajapaksa) நியமித்துள்ள அரச தலைவர் செயலணிக்குழு இன்று முதல் முறையாக கூடவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான அரச தலைவர் செயலணிக்குழுவை நேற்று முன்தினம் சிறிலங்கா அரச தலைரவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.
குறித்த செயலணியில் அதில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda aAththe Gnanassara Thero) செயலணிக்குழுவின் தலைவராக பதவி வகிக்கின்றார்.
7 பௌத்த பிரதிநிதிகள் 4 முஸ்லிம் பிரதிநிதிகள் குறித்த அரச தலைவர் செயலணிக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த செயலணிக்குழுவில் தமிழ் பிரதிநிதிகளோ, பெண் பிரதிநிதிகளோ அங்கம் வகிக்கவில்லை என கடும் எதிர்ப்பலைகள் எழுந்தள்ள நிலையில் தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க அரச தலைவர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.