உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை போட்டியில் தோற்ற பிறகு ஒருவார கால இடைவெளியில் ஞாயிறன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி சந்திக்கிறது.
வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பிய இந்திய அணியின் பந்து வீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி சில மாற்றம் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது புவனேஷ்வர் குமார் உட்கார வைக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் ப்ளேயிங் 11ல் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வர் 3 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுக்க ஷமி 3.5 ஓவரில் 43 ரன்கள் விளாசப்பட்டார் என்பது முக்கிய விடயமாகும்.
அதே போல தமிழக வீரர் அஸ்வினும் களத்தில் இறங்கலாம். அதாவது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா, ஷர்துல் தாக்கூர், ராகுல் சாகர், அஸ்வின், ஜடேஜா என பவுலிங் படை இறக்கப்படலாம் என கூறப்படுகிறது.