Loading...
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடனான நேற்றைய சந்திப்பில் இதை தெரிவித்தார்.
நாட்டின் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியேற்றப்பட்டுள்ளது. 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் சமூகத்தில் 60 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கிறது.
Loading...
15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 32 சதவீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கு நாளாந்தம் 4 இலட்சம் தடுப்பூசிகள் கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...