இரண்டாம் ஆண்டு பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டதாக தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலால், பல்கலைகழக்கழக மாணவி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவின் கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த, வடக்கு வேல்ஸில் உள்ள Anglesey பகுதியைச் சேர்ந்த மாரெட் ஃபோல்க்ஸ் (21), ஜூலை 8 ஆம் திகதி, மெனாய் ஜலசந்தியின் மீது அருகிலுள்ள பிரிட்டானியா பாலத்தில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
கார்டிஃப் பல்கலைக் கழகத்தில், பார்மசியூட்டிகல்ஸ் இரண்டாம் ஆண்டு கற்றுக் கொண்டிருந்தார். அத்துடன், பல ஆண்டுகளாக பார்மசியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.
நேற்று (29) நடந்த மரண விசாரணையில், அவர் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலாலேயே உயிரை விட்டது தெரிய வந்தது. அவர் மரணிப்பதற்கு சற்று முன்னதாகவே மின்னஞ்சல் கிடைத்துள்ளது.
அவர் இரண்டாம் ஆண்டு பரீட்சையை இரண்டாவது முறையாக தோற்றியிருந்தார். இதில் 39 சதவீத மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்துள்ளார் என மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. உண்மையில் அவர் தேர்வில் 62 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றழருந்தார்.
அவர் மார்ச் 26 அன்று முதலாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றிய போது, அதில் சித்தி பெறவில்லை. 39 சதவீத மதிப்பெண்களையே பெற்றார்.
இதையடுத்தே, இரண்டாவது முறையாக ஏப்ரல் 24 அன்று மறுதேர்வில் தோற்றியிருந்தார்.
ஆனால், பல்கலைகழக நிர்வாகம், அவர் ஏற்கனவே சித்தி பெறாத, முதலாம் முறை பரீட்சையின் மதிப்பெண்ணை, மறுதேர்வு மதிப்பெண் என தவறுதலாக அனுப்பி விட்டது.
விசாரணையின் போது அவரது தாயார் அயோனா ஃபோல்க்ஸ் பேசுகையில், கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சலைப் பெற்றதன் ‘நேரடி விளைவு’ என்று கூறினார்.
‘அவருக்கு ஒரு தானியங்கி மின்னஞ்சல் வந்தது – தனிப்பட்ட எதுவும் இல்லை – தொலைபேசி அழைப்பு இல்லை. தோல்வியடைந்துவிட்டதாக அவள் நம்பினாள், அவள் பட்டப்படிப்பில் முன்னேற முடியாது என்று மின்னஞ்சல் கூறியது.
அவள் தன் படிப்பிலும், மருந்தகத்தில் வேலை செய்வதிலும் அர்ப்பணிப்புடன் இருந்தாள், அவள் திகிலடைந்திருப்பாள். அந்த வாக்கியத்துடன் தன் கனவுகள் மற்றும் அபிலாஷைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அவள் உணர்ந்திருப்பாள் – 21 வயது பெண்ணுக்கு இது நம்பமுடியாதது.’ என்றார்.
பல்கலைக்கழகம் நேரடியாக முடிவுகளைப் பற்றி தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்பது குறித்து மாணவர்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தான் கருதுவதாகக் கூறினார்.
சம்பவத்திலன்று, டெஸ்கோவிற்குப் பாலாடைக்கட்டி தயாரிக்க தேவையான பொருட்களைப் பெறப் போவதாக தாயாரிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திற்குப் பிறகு, ஃபோல்க்ஸ் பிரிட்டானியா பாலத்திற்குச் சென்றார்.
அவர் தன் வாகனத்தை விட்டுவிட்டு பாலத்தின் ஓரமாக நடந்து சென்று ‘மறைந்து’ போனார்.
அன்றைய தினம் தான் முடிவுகளைப் பெற இருந்ததாகவோ அல்லது தான் வெற்றிபெறவில்லை என்று மின்னஞ்சல் வந்ததையோ பற்றி மகள் குறிப்பிடவில்லை என்று தாயார் கூறினார்.
ஃபோல்க்ஸ் தனது இறப்பிற்கு முன் எந்த வித மனச்சோர்வையும் காட்டவில்லை என்றும், ஆனால் அவரது பாட்டியின் சமீபத்திய மரணத்தால் வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அன்வென் ஜோன்ஸ் என்பவர் விபரிக்கையில், மாரெட் ஃபோல்க்ஸ் தனது செயல்களில் ‘தயக்கமில்லாமல்’ இருந்ததாகக் கூறினார்.
‘அவர் ஒரு நொடியில் மேலேறிச் சென்றாள் – நிறுத்தவும் சிந்திக்கவும் இல்லை“ என்றார்.
தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன், ஃபௌல்க்ஸ் தனது தோழி ஒருவருக்கு முடிவுகளைப் பற்றி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்: ”I did c**p’ என தகவல் அனுப்பியிருந்தார்.