க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் நிலை குறித்து விரிவாக ஆராயப்படும்.
தற்போதைய நிலையை ஆராய்ந்த பின்னரே க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகும் திகதி குறித்த உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வகுப்புகள் ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.