தொழில் வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேசப்பற்று மிக்க ஒருவரின் ஒத்துழைப்பு கிட்டும்.
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் எண்ணம் உருவாகும்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஏதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும்.
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். வருமானம் போதுமானதாக இருக்கும்.