கடந்த ஆட்சியில் காணப்பட்ட “கோத்தா பயம்” பற்றி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா கருத்து வெளியிட்டுள்ளார்.
மொனராகலையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த ஆட்சியின்போது ஆட்சியாளர் மீது அச்சம் இருந்தது. அடுத்ததாக கள்வர் பயம் இருந்தது.
கள்வர்கள் இருந்ததால்தான் ஜனாதிபதி அதிலிருந்து வெளியேறினார். புதையல்களை கொள்ளையடித்தனர், வாள்களை கொள்ளையடித்தனர், எதைச் செய்யவில்லை?
இவை அனைத்தையும் விட “கோத்தா பயம்” இருந்தது. கோத்தபாய வரும் முன்னர் செல்வார்கள். நாட்டை சிக்கலுக்குள் தள்ளினார்கள்.
கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு (மஹிந்தவுக்கு) மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அது தவறில்லை.
ஆனால், அவரை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டவர்கள் கள்வர்கள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க இடமளிப்பதா, இல்லையா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.